Saturday, June 7, 2008

என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு இங்குமங்கும் தாவுகிறது அந்தப் பூனை...


என் சாளரத்தைப் பிரித்துக்கொண்டு
இங்குமங்கும் தாவுகிறது
அந்தப் பூனை...
நோக்கமற்ற முயற்சிகளின் முடிவு
மீண்டும் தரையோடு...
விரல்களைக் கீறும்போது
ச்ச்சூ... சொல்லவில்லை நான்...
மீண்டும் மீண்டும் கீறிவிட்டு
என் முகம் பார்கிறது...
பின்
என் சுவாசக்கோளத்தைத் தட்டிக்கொண்டு
சுவருடன் முட்டி நிற்கிறது...
சில நிகழ்தல்களிற்கு
காரணங்களுமில்லை...
கற்பிதங்களுமில்லை...
விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...

--
பிரம்மியா கிருபநாயகம்,
மட்டக்களப்பு

9 comments:

Thambiluvil said...

hello mayuran,
we got ur comments , do u know one,
if we want to write something we want to know about that full detail, u already wrote about that thandiadeva swamy detail,
that blog is peoples blog, so everybody can sent article, so tat we publish, but we didnt like to wrote badly, its not our rights, anyway, thanks for comments, dont write again about badly , some body never like us, they can do action,
bye...

M.Rishan Shareef said...

அருமையான கவிதையொன்று !

megat said...

Hi!! Your blog are very nice and more info. I hope follow my blog and please click my google ads.

Unknown said...

நல்ல கவிநயம் உங்களுக்கு.... என் வாழ்த்துக்கள் .....

Anonymous said...

மயுரன் அண்ணா தங்களுடைய கேள்விகளுக்கு சரியான விளக்கம் கடந்த மாத தாயகம் சஞ்சிகையிலே வெளியாகியிருக்கிறதாம். நான் தற்போது யாழ்ப்பாணத்தில் இருப்பதால் அது இன்னும் என் கைகளில் கிடைக்கவில்லை. கிடைத்தால் அதையும் பதிவிடகிறேன்.முடிந்தால் பாருங்கள்...

இறக்குவானை நிர்ஷன் said...

அழுத்தமாய் பதியும் வரிகள்.

பின்னூட்டத்தில் வர்ட் வெரிஃபிகேஷனை நீக்கிவிடுங்கள்.

இளைய அப்துல்லாஹ் said...

மிக நல்லா வந்திருக்கு கவிதை

Anonymous said...

its really nice

U.P.Tharsan said...

//விதைக்கப்பட்டவை அறுக்கப்படுகின்றன
சில வேளைகளில்
பதர்களுடன் கதிர்களும்...//

நன்றாக இருக்கிறது. இவை நான் ரசித்த வரிகள்.